ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு


ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு

ஈரோடு


திருப்பூர் மாவட்டம் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் விஜயராகவ் (வயது 19). இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை சேலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் செல்ல பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் விஜயராகவ் பயணம் செய்தார். இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்தபோது, விஜயராகவ் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் மாயமாகி இருந்தது.

உடனடியாக அவர் தனது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தனது செல்போனை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விஜயராகவ் இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போனை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story