மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது கைதுசெய்யப்பட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). ஓட்டல் தொழிலாளி.. சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள வாரசந்தைக்கு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சென்றார். வாரச்சந்தையின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தார். அப்போது அவர் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சரவணன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போவதாக புகார் வந்த வண்ணம் இருந்தன. அதன் பேரில் காரைக்குடிபோலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டாலின், சப்- இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கோவிலூர் நெசவாளர் காலனியை சேர்ந்த ரவி (49) ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ராஜா ( 42) ஆகிய 2 பேரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். இதைதொடா்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.