டாஸ்மாக் கடை கதவை உடைத்து திருட வந்த மர்ம நபர்கள்
டாஸ்மாக் கடை கதவை உடைத்து திருட வந்த மர்ம நபர்கள் ரூ.200-ஐ மட்டும் எடுத்து சென்றனர்.
ராமநாதபுரம் அருகே பழங்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு விற்பனையாளர் ராஜேஷ்கண்ணா, மேற்பார்வையாளர் சேகர் ஆகியோர் விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் கல்லா பெட்டியை திறந்து பணத்தை திருட முயன்றனர். ஆனால் அதை திறந்து பார்த்த மர்ம நபர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் அந்த கல்லா பெட்டியில் வெறும் ரூ.200 மட்டுமே இருந்தது. ஆனாலும் மர்்ம நபர்கள் அதையும் விட்டுவைக்காமல் ரூ.200-ஐ திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
நேற்று காலையில் கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். தகவல் அறிந்து கடை மேற்பார்வையாளர் அங்கு சென்று மதுபாட்டில்கள் எதுவும் திருடப்பட்டுள்ளதா? என பார்த்தார். ஆனால் மதுபாட்டில்கள் எதுவும் திருடப்படவில்லை. பணத்தை மட்டும் திருடர்கள் எடுத்து சென்றதால் திருட வந்தவர்கள் மதுகுடிக்காதவர்களாக இருக்கலாம் என்று அங்கு வேடிக்கை பார்த்தவர்கள் சிரித்து கொண்டே கூறினர்.