கடத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.2¾ லட்சம் மதிப்புள்ள அலுமினிய கம்பிகள் திருட்டு
தர்மபுரி
மொரப்பூர்:
கடத்தூர் மின்சார வாரிய அலுவலகத்தில் சேமிப்பு கிடங்கு உள்ளது. அதில் விவசாய மின் இணைப்பு மற்றும் விரிவாக்க பணிகளுக்காக தளவாட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி சேமிப்பு கிடங்கின் அருகே அலுமினிய கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் வைத்து விட்டு சென்றனர். பின்னர் மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது, அலுமினிய கம்பிகள் திருடப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் மூர்த்தி கடத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து, அலுமினிய கம்பிகளை திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story