ஏலகிரி கிராமத்தில் செல்போன் கோபுரத்தில் திருட்டு


ஏலகிரி கிராமத்தில் செல்போன் கோபுரத்தில் திருட்டு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 3:14 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில் தனியார் செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் அந்த செல்போன் கோபுரத்தின் மூலம் சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் செல்போன் கோபுரத்தில் ஆய்வு செய்தனர். அப்போது செல்போன் கோபுரத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள எந்திரம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட செல்போன் கோபுர பொறுப்பாளர் ஈஸ்வரன் தொப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story