தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 37). மெக்கானிக். இவருடைய மனைவி ராதிகா. இவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ராதிகா தனது ஸ்கூட்டரை, அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது அந்த ஸ்கூட்டர் திருடு போய் இருந்தது. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ஸ்கூட்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த நரேஷ்குமார் (21) என்ற வாலிபர் அந்த ஸ்கூட்டரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நரேஷ்குமாரை தர்மபுரி டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர். திருடப்பட்ட ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story