மொபட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருட்டு
சிங்கம்புணரியில் மொபட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் மொபட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை, பணம் திருட்டு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொடுக்கப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி ரவிபிரியா. இவர் சிங்கம்புணரியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகைகளை வைத்து பணம் பெறுவதற்காக வந்தார். இதையொட்டி ரவிபிரியா ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 7 பவுன் நகை ஆகியவற்றை தனது ெமாபட்டில் இருக்கைக்கு அடியில் வைத்து கொண்டு பெரிய கடை வீதி சாலையில் உள்ள மளிகை கடைக்கு சென்றார்.
அங்கு கடை முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு மீண்டும் வந்து பார்த்தபோது மொபட்டின் சீட் பகுதி திறந்து கிடந்தது. அந்த மொபட் இருக்கையின் அடியில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரம், 7 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டின் இருக்கைக்கு அடியில் பணம் மற்றும் நகை இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து வந்து திருடி சென்றது தெரியவந்தது.
தொடர் சம்பவங்கள்
இதுகுறித்து ரவிபிரியா சிங்கம்புணரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலங்களாக வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு பணத்தை திருடி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
வங்கிகளை சுற்றி மர்ம நபர்கள் சுற்றி வருகின்றனர். எனவே, போலீசார் சந்தேகத்திற்கு இடமாக வங்கி முன்பு சுற்றி திரியும் நபர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் பிடித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், அறிமுகம் இல்லாத நபர்கள் அருகில் நின்றால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், பணம் மற்றும் நகைகளை இருசக்கர வாகனத்தில் வைக்க வேண்டாம் எனவும், சந்தேகப்படும் நபர்கள் நின்றால் உடனடியாக போலீசாருக்கு தகவல் ெதரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.