மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 24 Feb 2023 9:26 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிபேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 51). இவர் தள்ளு வண்டியில் மீன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணிக்கம் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தர்மபுரியில், கிருஷ்ணகிரி ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (60). தொழிலாளி. இவர் தர்மபுரி 4 ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மருந்து வாங்க சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இது தொடர்பாக செல்வம் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story