மோட்டார்சைக்கிள் திருட்டு


மோட்டார்சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள தினையத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மோகன். இவர் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாவூர் விலக்கு சாலையில் உள்ள தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் முகமூடி அணிந்து கையில் ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் மோட்டார்சைக்கிளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். மறுநாள் பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடு போயிருப்பதை கண்டு ரமேஷ் மோகன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த திருட்டு சம்பவம் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து அவர் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story