ஈரோடு கடைகளின் முன்பு விற்பனைக்கு வைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒயர்களை திருடிய டிப்-டாப் வாலிபர்- கண்காணிப்பு கேமரா காட்சி மூலமாக போலீசார் விசாரணை


ஈரோடு கடைகளின் முன்பு விற்பனைக்கு வைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒயர்களை திருடிய டிப்-டாப் வாலிபர்- கண்காணிப்பு கேமரா காட்சி மூலமாக போலீசார் விசாரணை
x

ஈரோடு கடைகளின் முன்பு விற்பனைக்கு வைத்த ரூ.1 லட்சம் ஒயர்களை டிப்-டாப் வாலிபர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமரா காட்சி மூலமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு

ஈரோடு கடைகளின் முன்பு விற்பனைக்கு வைத்த ரூ.1 லட்சம் ஒயர்களை டிப்-டாப் வாலிபர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமரா காட்சி மூலமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒயர் திருட்டு

ஈரோடு பஸ் நிலையம் அருகில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு நாச்சியப்பா வீதியில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இந்த கடையின் முன்பு பொதுமக்களின் பார்வைக்காகவும், வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்வதற்காகவும் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டன. இதில் நேற்று முன்தினம் இரவில் கடையின் முன்பு வைக்கப்பட்ட பொருட்களை ஊழியர்கள் உள்ளே எடுத்து வைத்தனர்.

அப்போது சுமார் ரூ.65 ஆயிரம் மதிப்பிலான புதிய ஒயர் பண்டல் திருட்டுபோனது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடையில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களின் வீடியோவை பார்த்தபோது ஸ்கூட்டரில் வந்த டிப்-டாப் வாலிபர் ஒருவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது ஒயரை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதேகடையில் கடந்த மாதம் 29-ந் தேதி அந்த வாலிபர் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஒயரையும் திருடிச்சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதேபோல் ஈரோடு நேருவீதியில் சேகர் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடையில் கடந்த 30-ந் தேதி டிப்-டாப் வாலிபர் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஒயரை திருடினார். மேலும் அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையிலும் அவர் தனது கைவரிசையை காட்டி உள்ளார். மொத்தம் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஒயரை அவர் திருடி சென்று உள்ளார்.

இதுகுறித்து கடைகளின் உரிமையாளர்கள் ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அந்த டிப்-டாப் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் பட்ட பகலிலேயே டிப்-டாப் வாலிபர் கடைகளில் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story