சோலார் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


சோலார் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x

சோலார் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஈரோடு

சோலார்

சோலார் அருகே உள்ள கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலுச்சம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன் மண்டபத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் உண்டியல் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வீராவும் வரவழைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சம்பவம் நடந்தபோது மழை பெய்துகொண்டு இருந்ததால் உண்டியலை உடைத்த சத்தமும் வெளியே கேட்கவில்லை. உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story