வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
x

மதுரையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை

மதுரையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நகை, வெள்ளி திருட்டு

மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் செவ்வந்தி தெருவை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 57). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 14 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்கள். 30 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகை தடயங்களை சேகரித்தனர்.

போலீசில் புகார்

இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்கள். 30 ஆயிரம் ரூபாய் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story