கட்டுமான பொருட்கள் கடையில் திருட்டு


கட்டுமான பொருட்கள் கடையில் திருட்டு
x

பேட்டையில் கட்டுமான பொருட்கள் கடையில் திருட்டு நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டை சாம்பபுரம் பகுதியை சேர்ந்தவர் மாடக்கண்ணு மகன் அய்யப்பன் (வயது 40). இவர் பேட்டை செக்கடி பகுதியில் ஜல்லி, மணல், செங்கல், ஹாலோ பிளாக் கல், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கடையை திறக்கச் சென்றபோது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது இருக்கைகள் மற்றும் பொருட்கள் உடைக்கப்பட்டு கிடந்ததுடன், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா, ஹார்ட் டிஸ்க் மற்றும் ரூ.47 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story