அம்மன் கோவிலில் திருட்டு


அம்மன் கோவிலில் திருட்டு
x

காட்பாடியில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மெட்டுக்குளம் கிராமத்தில் மாருதி நகர் உள்ளது. இங்கு சித்தூர்- கடலூர் நெடுஞ்சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலை நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story