ஆவின் பாலகத்தில் திருட்டு
மேலப்பாளையத்தில் ஆவின் பாலகத்தில் திருட்டு சம்பவம் நடைபெற்றது.
திருநெல்வேலி
நெல்லை மேலப்பாளையம் உழவர் சந்தையில் ஆவின் பாலகம் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் ஏஜெண்டு எடுத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் கடையை அடைத்து விட்டுசென்றார். நேற்று அதிகாலையில் வந்து பார்த்த போது பாலகம் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு இந்த சுமார் ரூ.1000 மதிப்புள்ள பால் பாக்கெட்டுகள், நெய், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களையும் ரூ.1,500-யையும் மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Related Tags :
Next Story