துர்க்கை அம்மன் கோவிலில் திருட்டு


துர்க்கை அம்மன் கோவிலில் திருட்டு
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 3:22 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே துர்க்கை அம்மன் கோவிலில் திருட்டு நடந்தது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பூஜை செய்வதற்காக பூசாரி அய்யப்பன் கோவிலுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் நெற்றியில் இருந்த 2 கிராம் நகை மற்றும் கோவிலில் இருந்த சில பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story