கிருஷ்ணன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
பளுகல் அருகே கிருஷ்ணன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு போனது.
கன்னியாகுமரி
களியக்காவிளை:
பளுகல் அருகே கிருஷ்ணன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு போனது.
பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ராமவர்மன்சிறை பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினசரி காலை, மாலை என 2 வேளைகளில் பூஜை நடைபெறுவது வழக்கம். சம்பவத்தன்று இரவு பூஜைகளை முடித்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கோவில் அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்தபோது, 5 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் பளுகல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story