தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் திருட்டு
தூத்துக்குடி அருகே தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் திருட்டுசம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தின் முன்பகுதியில் கண்ணாடியால் மூடப்பட்ட தூய மிக்கேல் அதிதூதர் சொரூபம் உள்ளது. இந்த சொரூபத்தின் தலையில் வெள்ளி கிரீடம் அணிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று சொரூபம் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று சொரூபத்தின் தலையில் இருந்த வெள்ளி கிரீடத்தையும் மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆலய நிர்வாகத்தினர் தருவைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக தருவைகுளம் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story