செல்போன் கடையில் திருட முயற்சி


செல்போன் கடையில் திருட முயற்சி
x

முத்துப்பேட்டையில் நள்ளிரவில் செல்போன் கடையில் திருட முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையில் நள்ளிரவில் செல்போன் கடையில் திருட முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்போன் கடையில் திருட்டு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை செக்கடி தெருவை சேர்ந்தவர் முகம்மது சாதிக். இவருடைய மகன் கமால்முகைதீன்(வயது28). இவர் நியூ பஜார் பள்ளிவாசல் காம்ப்ளக்சில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கமால்முகைதீன் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பெரிய கடைத்தெருவில் ஓட்டலில் வேலை பார்த்துவிட்டு ஓட்டல் தொழிலாளி தேவராஜன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது செல்போன் கடையில் செல்போன்களை திருடி 2 பேர் மூட்டைகட்டி திருடி செல்ல முயன்றனர். இதைக்கண்டு தேவராஜன் கூச்சலிட்டார்.

பிடிபட்டனர்

இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர்கள் 2 பேரும் சாக்குப்பையில் நிரப்பிய செல்போன் மூட்டையை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள் கூடினர். இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர ேதடுதல் வேட்டை நடத்தி தப்பி ஓடிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

கைது

விசாரணையில் அவர்களில் ஒருவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளஎழிலூர் கிராமத்தை சேர்ந்த தூண்டி என்ற சேகர் மகன் பிரகாஷ் (வயது25) என்றும் மற்றொருவர் சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. சிறுவன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் இருவரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிரகாசை திருத்துறைப்பூண்டி கிளை சிறையிலும், சிறுவன்

தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.


Next Story