மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது
சேவூர்
அவினாசி அருகே உள்ள காசிகவுண்டன்புதூரில் ராயன்கோவில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). இவர் கால்நடை மருத்துவமனை அருகில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் நண்பரிடம் இருந்து ரூ.2 லட்சம் வாங்கி வந்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்து பூட்டி வீட்டுக்கு சென்றார். பின்னர் சுமார் 1 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பணம் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பழங்கரை அருகே போலீசார் வாகன சோதனையில் மேற்கொண்டனர். அப்போது
போலீசாரை பார்த்த மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தப்ப முயன்றார். இதை தொடர்ந்து அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் பவானிசாகர் பகுதியை சேர்ந்த ரத்தினசாமி மகன் கண்ணன் என்கின்ற கவியரசு (வயது 21) எனத் தெரிய வந்தது. அவர் சுரேஷின் இரண்டு லட்ச ரூபாயை திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கவியரசுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1லட்சத்து 80 ஆயிரத்தை மீட்டு அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
------------