கிறிஸ்தவ தேவாலயத்தில் திருட்டு
ஆலங்குளத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கதவை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு எதிரே தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான பரிசுத்த யோவான் ஆலயம் உள்ளது. இங்கு அதிகாலை 4.30 மணி இரவு 7:30 மணி ஆகிய இரண்டு வேளைகளில் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆராதனை முடிந்தபின் ஆலயத்தை பூட்டிச் சென்ற சபை ஊழியர் பாக்கியராஜ், நேற்று அதிகாலை ஆராதனைக்கு வந்தார். அப்போது ஆலயத்தின் தென் பக்கத்தில் உள்ள கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த குத்துவிளக்கு, கீ போர்டு மற்றும் உண்டியலில் இருந்த பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1.50 லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story