வட மாநிலத்தவர் தங்கி இருந்த அறைகளில் திருட்டு
முத்தையாபுரத்தில் வட மாநிலத்தவர் தங்கி இருந்த அறைகளில் பொருட்கள் திருடப்பட்டது.
தூத்துக்குடி
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 71). இவருக்குச் சொந்தமான 10 -க்கும் மேற்பட்ட வீடுகள் முத்தையாபுரம் சுபாஷ் நகரில் உள்ளது. அந்த வீடுகளில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 14 பேருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அங்கு தங்கியிருந்த நபர்கள் காலையில் வேலைக்கு சென்று விட்டதாகவும், பின்பு மாலையில் சுமார் மாலை 4 மணியளவில் திரும்பி வந்துள்ளனர். அப்போது, அவர்கள் தங்கி இருந்த 3 அறைகளின் கதவு மற்றும் மோட்டார் ரூம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது. அந்த அறைகளில் இருந்த 10 செல்போன் மற்றும் ரூ.9 ஆயிரம் திருடப்பட்டு உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story