தூத்துக்குடியில்கிராம நிர்வாக அலுவலகத்தில் திருட்டு
தூத்துக்குடியில்கிராம நிர்வாக அலுவலகத்தில் லேப்டாப் திருடப்பட்டது.
தூத்துக்குடி அண்ணாநகர் மெயின் ரோட்டில் மீளவிட்டான் பகுதி 2-க்கான கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் கிராம நிர்வாக அலுவலர் சிவபெருமாள் அலுவலகத்தை திறக்க வந்தாராம். அப்போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவபெருமாள் உள்ளே சென்று பார்த்த போது, அலுவலகத்தில் இருந்த லேப்டாப்பை யாரோ மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவம் இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது