12 ஆடுகள் திருட்டு


12 ஆடுகள் திருட்டு
x

திண்டிவனம் அருகே 12 ஆடுகள் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

திண்டிவனம், அக்.21-

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவா் மாரிமுத்து (வயது 45). இவா் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டி அமைத்து ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பட்டியில் இருந்த 12 வெள்ளையாடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆடுகள் திருடிச்சென்றது தொடர்பாக திண்டிவனம் மன்னார் சாமி கோவில் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 22), சத்யராஜ் (26), குமார் (25), கமல் (34) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

12


Next Story