செங்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

செங்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
x

செங்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

செங்கம் அருகே உள்ள ஆலப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 44). விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் விவசாய பணி செய்து கொண்டிருந்ததார். இந்த நிலையில் வீட்டின் முன்புறம் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த சுமார் 12 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி விட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4½ லட்சத்துக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் செங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story