விவசாயி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு


விவசாயி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
x

குடியாத்தம் அருகே விவசாயி வீட்டில் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

வேலூர்

12 பவுன் நகை திருட்டு

குடியாத்தத்தை அடுத்த மேல்சிங்கல்பாடி செம்மண் குட்டை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 54) விவசாயி. இவரது மனைவி லட்சுமி. நேற்று காலையில் விவசாய வேலை சம்பந்தமாக அண்ணாமலை வெளியே சென்று உள்ளார். அவரது மனைவி லட்சுமி 100 நாள் வேலை திட்ட பணிக்காக சென்றுள்ளார். வெளியே சென்ற அண்ணாமலை மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 12 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் அண்ணாமலை புகார் அளித்தார். அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story