வனத்துறை ஊழியர் வீட்டில் 13½ பவுன் நகைகள் திருட்டு


வனத்துறை ஊழியர் வீட்டில் 13½ பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:30 AM IST (Updated: 19 Sept 2022 5:54 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வனத்துறை ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 13½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வனத்துறை ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 13½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்த துணிகர திருட்டு குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நகைகள் திருட்டு

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ராஜாஜி நகரை சேர்ந்தவர் ரகமத்துல்லா (வயது 37). வனவரான இவர், குடும்பத்துடன் ராயக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். ரகமத்துல்லாவின் தந்தை பாஷா, வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் அவருடைய தந்தை கீழே வந்து பார்த்த போது, கீழ் வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து பாஷா தன்னுடைய மகன் ரகமத்துல்லாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். வீட்டில் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 13½ பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தன.

போலீசார் விசாரணை

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரகமத்துல்லா, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

ரகமத்துல்லா குடும்பத்துடன் வெளியே சென்றதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் அவரது வீட்டில் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story