வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு
x

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 57). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்கு சென்றுள்ளார்.

வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ.33 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கன்னியம்மாள் கீழ்க்கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story