வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
x

சோளிங்கர் அருகேவீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஏ.வி.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிக்கு சென்ற சதீஷ்குமார் மறுநாள் காலை வீட்டிற்கு வந்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

பீரோவில் பார்த்தபோது 18 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கொண்டபாளையம் போலீசில் சதீஷ்குமார் புகார் அளித்தார்.

போலீஸ் இன்ஸ்பொக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்கள். அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் உள்ளதா என அப்பகுதியில் விசாரணை செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story