2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியம் நெய்தல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 73). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதேபோல் கும்பகோணம் அருகே உள்ள அன்னூர் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (29) என்பவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் அவசர சிகிச்சை வார்டு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தழகன், சத்யன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.