2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
தாரமங்கலம்:-
தாரமங்கலம் அருகே உள்ள அணைமேடு நீர்வீழ்ச்சியை சுற்றி பார்க்க எடையபட்டியை சேர்ந்த கணபதி (வயது 24) மற்றும் பாப்பம்பாடி சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த ஹரிஹர சுதன் (19) ஆகிய 2 பேர் தங்களின் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் சாலையோரம் தங்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நீர்வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்பி வந்தனர்.
அப்போது அவர்கள் 2 பேரின் மோட்டார் சைக்கிளும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் இருவரும் கொடுத்த புகார்களின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire