2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x
தினத்தந்தி 13 April 2023 1:00 AM IST (Updated: 13 April 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த பெரியேரிப்பட்டி துண்டு மானியம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் நேற்று காலை 8.30 மணி அளவில் அமரகுந்தி சொக்கநாதர் கோவிலுக்கு சாமி கும்மிட சென்று உள்ளார். பின்னர் கோவில் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்ததை கண்டு் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

இதே போல் எடப்பாடி கவுண்டர் தெரு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (38). என்பவர் தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து நேற்று தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த 2 புகார்களின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடி வருகிறார்கள்.


Next Story