27 ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை
ஆதனக்கோட்டையில் 27 ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 ஆடுகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதனக்கோட்டை முத்துராஜா தெரு மேல காட்டை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி வாசுகி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 30-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டின் அருகே உள்ள கிடையில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது 27 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் ஆடுகள் கிடைக்கவில்லை.
வலைவீச்சு
இதுகுறித்து வாசுகி ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விலை போகக்கூடியு ஆடுகளை விற்று தனது மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்கலாம் என நினைத்து மாப்பிள்ளை பார்க்க தொடங்கினோம். இந்த நேரத்தில் ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர் என்று கவலையுடன் வாசுகி கூறினார்.