30 ஆடுகள் திருட்டு; 6 பேர் மீது வழக்கு
திருமயம் அருகே 30 ஆடுகள் திருட்டில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளர்.
ஆடுகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவருக்கு சொந்தமான 6 ஆடுகள், திருமயம் சமத்துவபுரத்தை சேர்ந்த துரைசாமிக்கு சொந்தமான 4 ஆடுகள், மணவாளங்கரை கருப்பையாவுக்கு சொந்தமான 4 ஆடுகள், திருமயம் மேலூர் முகமது ராஜாவுக்கு சொந்தமான 3 ஆடுகளை மர்மநபர்கள் நேற்று திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து 4 பேரும் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
6 பேர் மீது வழக்கு
இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் குளத்தூர் இளவயலை சேர்ந்த ஆனந்தன் மகன் பரணி குமார் (வயது 27), திருமயம் ஊனையூர் கருமத்தம்பட்டி பழனி மகன் பசுபதி (26), குமார் மகன் வீரமணிகண்டன் என்கிற ஜான் (26), திருக்கோகர்ணம் பாலன்நகர் பாலு மகன் பாலசுப்பிரமணியன் (19), திருமயம் லெனா விலக்கு சதுரகிரி மகன் கருப்பசாமி (19), பெருமாள் மகன் முருகேசன் (21) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் புலிவலம் சொக்கநாதன்பட்டி கருப்பாயிக்கு சொந்தமான 7 ஆடுகள், கப்பத்தான்பட்டி முத்துவுக்கு சொந்தமான 6 ஆடுகளும் திருட்டு போனது. இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.