36 பன்றிகள் திருட்டு


36 பன்றிகள் திருட்டு
x

தாயில்பட்டி அருகே 36 பன்றிகளை திருடி சென்றனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசியைச் சேர்ந்தவர் லோகராஜன் (வயது 36). இவர் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணியில் 36 பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் பன்றிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலையில் தொழுவத்திற்கு சென்றபோது தொழுவத்தின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 36 பன்றிகளையும் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து லோகராஜன் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story