4 பவுன் நகை-பணம் திருட்டு


4 பவுன் நகை-பணம் திருட்டு
x

4 பவுன் நகை-பணம் திருட்டு

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிபட்டியை சேர்ந்தவர் சேது. இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 50). நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் திட்ட வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த கைசெயின், தோடு உள்பட 4 பவுன் நகை மற்றும் 7500 ரூபாய் திருட்டுபோனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story