நகராட்சி ஊழியரின் 4 பவுன் நகை, செல்போன் திருட்டு
பழனியில் நகராட்சி ஊழியரிடம் நகை, செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திண்டுக்கல்
பழனி நகராட்சியில் பிட்டராக வேலை செய்து வருபவர் வெங்கடாசலம் (வயது 52). இவர் பழனி தாலுகா அலுவலக வளாக பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அறையில் தங்கி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வெங்கடாசலம் தனது 4 பவுன் நகை, செல்போனை அருகில் வைத்துவிட்டு அறையில் விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது காற்றுக்காக அறை கதவை அவர் திறந்து வைத்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் அந்த அறைக்குள் புகுந்த மர்மநபர்கள், வெங்கடாசலத்தின் நகை மற்றும் செல்போனை திருடி சென்றனர்.
இதற்கிடையே நேற்று காலை வெங்கடாசலம் எழுந்து பார்த்தபோது, நகை மற்றும் செல்போன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story