5 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


5 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x

நெல்லையில் 5 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் பாபுஜி (வயது 47). இவர் தனது மோட்டார் சைக்கிளை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தி இருந்தாா். அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.

அதேபோல் நெல்லை தேவநல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜெபராஜ் (45), கங்கைகொண்டான் நேதாஜிநகரை சேர்ந்த சுப்பிரமணியன் (50) ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களும் திருடப்பட்டன. இதுகுறித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.மேலும் வடக்கன்குளம் புஷ்பாபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனையும் மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கீழத்திடியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த லட்சுமணன் (25) என்பவரின் மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story