வீட்டின் கதவை உடைத்து 8½ பவுன் நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து  8½ பவுன் நகை திருட்டு
x

வீட்டின் கதவை உடைத்து 8½ பவுன் நகை திருடு போனது

மதுரை


மதுரை கூடல்நகர் அடுத்த சிலையனேரி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 46). இவர் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதில் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 8½ பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புகழேந்தி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story