நகைக்கடையில் தங்க மோதிரம் திருட்டு


நகைக்கடையில் தங்க மோதிரம் திருட்டு
x

நகைக்கடையில் தங்க மோதிரம் திருட்டுபோனது.

மதுரை


மதுரை மேலமாசிவீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. சம்பவத்தன்று கடைக்கு 2 பேர் நகை வாங்க வந்தனர். அவர்கள் பல்வேறு நகைகளை பார்த்து விட்டு நகை வாங்காமல் சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு கடை ஊழியர்கள் நகைகளை எண்ணி பார்த்த போது அதில் ஒரு பவுன் தங்க மோதிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் தங்க மோதிரத்தை திருடியது தெரியவந்தது. இது குறித்து கடை நிர்வாகி தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story