சுற்றுலா பயணியின் மோட்டார் சைக்கிள் திருட்டு


சுற்றுலா பயணியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
x

சுற்றுலா பயணியின் மோட்டார் சைக்கிள் திருட்டு

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது45). இவர் சம்பவத்தன்று குடும்பத்தினருடன் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். மோட்டார் சைக்கிளை காந்தி மண்டபம் அருகே உள்ள முக்கோண பூங்காவையொட்டி நிறுத்தி விட்டு கடற்கரையை சுற்றி பார்க்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர் திருடி சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story