செல்போன் கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு


செல்போன் கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு
x

செல்போன் கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு

விருதுநகர்

அருப்புக்கோட்டை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா சிதம்பரம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 47). இவர் தனியார் செக்யூரிட்டி சர்வீசில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராமசாமிபுரத்தில் உள்ள செல்போன் கோபுர பகுதியில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.48 ஆயிரம் மதிப்புடைய 24 பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டதாக டெக்னீசியன் செந்தில்வேல்முருகன் என்பவர் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சக்திவேல் உடனடியாக அங்கு சென்று பார்த்தார். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் பாண்டிச்சேரியை சேர்ந்த சதீஸ்குமார் (37), சிவகாசியை சேர்ந்த ஆதிநாராயணன் (34) ஆகிய இருவரும் பேட்டரிகளை திருடிச்சென்றது தெரியவந்தது. பேட்டரி திருட்டு சம்பவம் தொடர்பாக சக்திவேல் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சதீஸ்குமார், ஆதிநாராயணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story