சார்-பதிவாளர் அலுவலகத்தில் பேட்டரிகள் திருட்டு


சார்-பதிவாளர் அலுவலகத்தில் பேட்டரிகள் திருட்டு
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பேட்டரிகள் திருடப்பட்டது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை மேலபஜார் பகுதியில் சார்-பதிவாளர் அலுவலகம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் இன்வெர்ட்டர் பேட்டரிகள் பழுதான நிலையில், புதிய பேட்டரிகள் பொருத்தப்பட்டன. பழைய 16 பேட்டரிகளை அலுவலகத்தின் வெளி பகுதியில் வைத்திருந்தனர். இதை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும். இது குறித்து கழுகுமலை சார்-பதிவாளர் சண்முகவேல் (பொறுப்பு) புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story