2 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டு


2 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டு
x

திருக்குறுங்குடியில் 2 கோவில்களில் உண்டியல் பணம் திருடப்பட்டது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி மேலரதவீதியில் உச்சிமகாளி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர்கள் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் ேகாவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் தர்மகர்த்தா பிச்சையா என்ற திருநாமம் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 மர்ம நபர்கள் காரில் வந்து இறங்கி, கோவிலுக்குள் புகுந்து உண்டியலை இரும்பு கம்பியால் உடைத்து பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதேபோல் திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கரையில் உள்ள இசக்கி அம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story