கார் சக்கரங்கள் திருட்டு


கார் சக்கரங்கள் திருட்டு
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் கார் சக்கரங்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் தெற்கு வீதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது72). சீர்காழியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு வாசலில் தனது புதிய காரை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை காரை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது காரின் 4 சக்கரங்களையும் காணவில்லை. மர்ம நபர்கள் அவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துராமன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சீர்காழி போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு காரின் டயர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story