செல்போன்கள் திருட்டு


செல்போன்கள் திருட்டு
x

செல்போன்கள் திருட்டு

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 31). இவர் ஈஸ்வரி நகரில் செல்போன் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் வந்து கடையை திறந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கடையை சோதனை செய்த போது கடையில் இருந்த பழைய செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விமல் குமார் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்துசெல்போன்களை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story