ரூ.1 லட்சம் மதிப்புள்ள மாட்டு எலும்புகள் திருட்டு


ரூ.1 லட்சம் மதிப்புள்ள மாட்டு எலும்புகள் திருட்டு
x

ஜோலார்பேட்டை அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள மாட்டு எலும்புகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த அண்ணாண்டப்பட்டி கருப்பனூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜமீல் (வயது 43). இவர் மாட்டு எலும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அதேப்பகுதியில் குடோன் உள்ளது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு எலும்புகளை வாங்கி வந்து குடோனில் வைத்து மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் ஜமீல் தனது குடோனுக்கு சென்று பார்த்த போது குடோனில் வைத்திருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான மாட்டு எலும்புகளை மர்ம ஆசாமிகள் யாரோ திருடி சென்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமீல் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story