பசு மாடுகள் திருட்டு


பசு மாடுகள் திருட்டு
x

சிவகாசி அருகே பசு மாடுகளை திருடி சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி நெடுங்குளத்தை சேர்ந்தவர் மாரிசெல்வம். இவர் தனக்கு சொந்தமான பசுமாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை தனது தோப்பில் வளர்த்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் வழக்கம்போல் மாடுகளுக்கு தீவனம் கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்க்கும் போது அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளில் 2 பசுமாடுகளை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிசெல்வம் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story