அரசு பள்ளியில் ஆவணங்கள் திருட்டு


அரசு பள்ளியில் ஆவணங்கள் திருட்டு
x
தினத்தந்தி 25 Aug 2023 1:45 AM IST (Updated: 25 Aug 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே அரசு பள்ளியில் ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்தனர். அப்போது பள்ளி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story