பீரோைவ உடைத்து நகை, பணம் திருட்டு


பீரோைவ உடைத்து நகை, பணம்  திருட்டு
x

பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே கட்டக்கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 62). இவரது மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வரும் ஆதிலட்சுமி வீட்டை பூட்டி விட்டு அருப்புக்கோட்டையில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.45 ஆயிரம் மற்றும் 1 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story